இந்த உணவை அடிக்கடி சாப்பிடாதீங்க – முடி கொத்து கொத்தாக கொட்டும்

தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு முடி கெரட்டின் மற்றும் இறந்த சரும செல்களால் தான் உருவாக்கபட்டுள்ளது. அதற்காக ஒரே இரவில் உங்கள் தலைமுடி வேகமாக வளர நேரடி வழி இல்லை.

ஆனால் தலைமுடியை ஆரோக்கியமாகவும் நீளமாகவும் வைத்திருக்க சில ஆரோக்கியமான விடயங்களை பின்பற்றலாம். இதில் மிகவும் முக்கியமாக முடி வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள எடுத்துகொள்வது தான்.

ஆனால் யார் இப்போது சத்தான உணவுகளை சாப்பிடுகின்றனர். யாருமில்லை இருந்தும் சில உணவுகள் முடி உதிர்வை அதிகமாக கொண்டு வரும். அந்த உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இனிப்புகள் இனிப்புகள் உடல்நலத்திற்கு நல்லதல்ல. இது உடல் எடையை அதிகரிப்பதோடு, முடி ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. சர்க்கரை இன்சுலினை அதிகரித்து, ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களை உயர்த்தி முடி உதிர்வை ஏற்படுத்தும். எனவே முடிந்தவரை இனிப்பு பண்டங்களை குறைத்து கொள்ளுங்கள். அதற்கு பதிலாக இயற்கை சக்கரை உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது.

வெள்ளை பிரட், மைதா பொருட்கள் மைதா உணவுகள், வெள்ளை பிரட் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இது ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களை உயர்த்தி முடி உதிர்வை ஏற்படுத்தும். ஜங்க் ஃபுட்ஸில் உள்ள கொழுப்புகள் முடிக்கு ஊட்டச்சத்து செல்வதைத் தடுக்கும். மைதா என்பது கோதுமையின் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் அரைக்கப்பட்ட மாவாகும், இதில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும்.இவை ரத்ததில் சக்கரையை அதிகமாக்கும்.

உப்பு அதிகம் உள்ள உணவுகள்
அதிக உப்பு சோடியத்தை அதிகரித்து, முடியை வறண்டு போகச் செய்யும். ஆல்கஹால் உடலை நீரிழக்கச் செய்து முடியை பலவீனமாக்கும். அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் செபம் உற்பத்தியை அதிகரித்து முடி உதிர்வை ஏற்படுத்தும்.உப்பு அதிகம் உள்ள உணவுகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (ஹாட் டாக், தொத்திறைச்சி), பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிற்றுண்டி உணவுகள், சில சாஸ்கள், ஊறுகாய், சீஸ், சாலட் டிரஸ்ஸிங் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் (MSG) ஆகியவை அடங்கும். இவற்றை முடிந்தவரை சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.

சோடா, கார்பனேற்றப்பட்ட பானங்கள் சோடா மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் என்பவை, கார்பன் டை ஆக்சைடு வாயுவை நீரில் கரைத்து தயாரிக்கப்படும் பானங்கள் ஆகும். இவற்றில் பொதுவாக சர்க்கரை, செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்ற அமிலங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அதிக சர்க்கரை மற்றும் பாஸ்பரஸ் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. இவை முடி உதிர்விற்கு வழி வகுக்கும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த கீரைகள், நட்ஸ், தயிர், பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *