500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தினார்களா? எப்படின்னு தெரியுமா?

பொதுவாகவே பெண்களின் முக அழகினை மேம்பதுத்துவதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றது. பொதுவாகவே தற்காலத்தில் பெண்களில் அதிகமானோர் லிப்ஸ் டிக் பூசுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.

மேக்கப் பொருட்களிலும் கூட அதிகம் விற்பனையாவது இந்த லிப்ஸ் டிக் தான் என ஒரு ஆய்வு தகவல் குறிப்பிடுகின்றது.

ஆனால், உதட்டுக்கு சாயம் பூசும் முறை 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புலக்கத்தில் இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றமதா? பண்டைய காலத்திர் பெண்கள் எப்படி லிப்ஸ்டிக் தயாரித்து பயன்படுத்தினார்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
எப்படி லிப்ஸ்டிக் பூசினார்கள்?

வரலாற்று ரீதியாக, மற்ற அழகுசாதனப் பொருட்களை விட லிப்ஸ்டிக் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு” என்று ஷாஃபர் குறிப்பிடுகிறார்.

முதல் அறியப்பட்ட லிப்ஸ்டிக் கிமு 3500 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, மேலும் பண்டைய ஊர் ராணி ஷூப்-அட் அதை அணிந்திருந்தார்.

லிப் டின்ட் “வெள்ளை ஈயம் மற்றும் நொறுக்கப்பட்ட சிவப்பு பாறைகள்” கலவையைக் கொண்டிருந்ததாக வரலாற்று தகவல்கள் குறிப்பிடுகின்றது.

அதனை தொடர்ந்து சிந்து சமவெளி நாகரிகத்தில் பெண்கள் காவி (a red clay dye) உதட்டுச்சாயமாகப் பயன்படுத்தினர் என குறிப்பிடப்படுகின்றது.

பண்டைய எகிப்தின் ராணி கிளியோபாட்ரா தனது உதடுகளை சிவப்பாகவும் கவர்ச்சியாகவும் பராமரிக்க கார்மைன் பூச்சிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்காக கார்மைன் பூச்சுகள் உலர்த்தப்பட்டு, பின்னர் கார்மினிக் அமிலத்தைப் பிரித்தெடுப்பதன் மூலம் பெறப்பட்ட சிவப்பு சாயத்தை உடுகளை நிறமூட்ட பயன்படுத்தினார்கள்.

இந்த முறை அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானதாக இருந்ததுள்ளர். மேலும் கிளியோபாட்ராவின் அழகின் ரகசியமும் இதுதான் என்று குறிப்பிடப்படுகின்றது.

பண்டை நாகரீகங்களில் வாழ்ந்த பெண்கள் பயன்படுத்திய, உதட்டுச்சாயங்கள் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது.

குறிப்பாக பூச்சிகள், மூலிகைகள், பழச்சாறுகள் மற்றும் தாதுக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சாயங்களை உதடுகளை சிவப்பாக காட்டுவதற்கு பயன்படுதியுள்ளார்கள். இந்த முறைகள் நவீன லிப்ஸ்டிக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *